search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருநங்கை வக்கீல்"

    • பத்மலட்சுமி கேரளாவின் முதல் திருநங்கை வக்கீல் என்ற சிறப்பை பெற்றார்.
    • பத்மலட்சுமிக்கு நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பத்மலட்சுமி என்ற திருநங்கை, சட்டம் படித்து கேரள பார் கவுன்சிலில் வக்கீலாக பதிவு செய்து கொண்டார்.

    இதன்மூலம் பத்மலட்சுமி கேரளாவின் முதல் திருநங்கை வக்கீல் என்ற சிறப்பை பெற்றார். இதற்காக பத்மலட்சுமிக்கு நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்தது.

    இந்த நிலையில் கேரளாவின் மலப்புரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முன்னியூர் கோவில் திருவிழாவில் நடந்த சாமி ஊர்வலத்தில் பத்மலட்சுமியின் உருவ படம் பொறித்த பதாகைகளை பக்தர்கள் ஏந்தி சென்றனர். அதில் தடைகளை தாண்டி, எதிர்ப்புகளை சமாளித்து, இழிவாக பேசியவர்களை புறந்தள்ளி வெற்றிக்கோட்டை தொட்ட உங்களை பாராட்டுகிறோம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    திருநங்கை வக்கீல் பத்மலட்சுமியின் உருவ படத்துடன் சென்ற கோவில் ஊர்வல காட்சிகளை திருநங்கைகளுக்கான உரிமைகளை மீட்டெடுக்கும் ஆர்வலர் ஷீத்தல் ஷியாம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

    தற்போது அந்த வீடியோ, சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இதனை பாராட்டி சமூக ஆர்வலர்களும் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.

    ×